You can easily invite all your friends to peperonity.com. When you log in or register with us, you can tell your friends about exciting content on peperonity.com! The messaging costs are on us.
...போதும். நேராக வீட்டுக்கு போக வேண்டியதுதான்....
என் வீட்டை அடைந்தேன். வீட்டுக்கு வெளியில் அப்பா,அம்மா எல்லாரும் நின்றிருந்தார்கள். என்னதான்
இருந்தாலும் பாசம் போகுமா என்ன!
சிரித்தப்படி நேராக போனேன்...
எங்கப்பா ஓடி வந்து ஒரு உதை விட்டார்..
தண்ட சோறு! எவனோ ஒருத்தன் உன்னை கடத்திக்கொண்டு போயிட்டு இரவு முழுதும் ஒரே போஃன், ஒரே ரகளை.
அப்படியே விட்டு விடலாம் என்று சொன்னேன். என் அம்மாவை காட்டி இவதான் அழுது ரகளை பண்ணி உடனே பணம்கொடுக்க சொன்னாள்... தண்டகர்மம் என்றார்.
உடனே எனக்கு சுர் என்று உறைத்தது! அப்போ அந்த வேலைக்காரந்தான் கிட்நாப்பரா? உண்மையில் நான் கடத்தப்பட்டேனா?
அப்பா எவ்வளவு கொடுத்தீங்க! என்றேன்..
ஒரு லட்சம்டா, ஒரு லட்சம் என்று சொல்லிவிட்டு சரமாரியாக அவர் வார்த்தைகளை கொட்டினார்"தண்டசோறு! மட சாம்பிராணி" என்று!
முதல் முறையாக எனக்கு தோன்றியது நான் ஒருவேளை அப்பா சொல்வது போல மட சாம்பிராணிதானோ?????